சுங்கத்திற்கு கிடைக்கும் வரி வருமானத்தில் சுமார் 25% வாகன இறக்குமதி மூலம் கிடைப்பதாகவும், அதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக சுங்க வருமான இலக்குகளை பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பிரதேசத்தில் இன்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இவ்வருடம் சுங்க வருமான இலக்குகளை நோக்கி நகர முடியாத நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடத்திற்கான சுங்க வருமான இலக்கு1220 பில்லியன் ரூபா எனவும், 2018 ஆம் ஆண்டு 918 பில்லியன் ரூபாவே வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சுங்கத்தின் பிரதான வருமான ஆதாரமாக இருந்த பொருட்களின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் 1220 பில்லியன் ரூபா இலக்கு வருமானம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.