சர்வதேச சந்தையில் வாரத்தின் முதல் நாளான இன்று (08) எண்ணெய் விலை சுமார் 4% உயர்ந்துள்ளது.
இஸ்ரேல் – பாலஸ்தீன் மோதல் நிலமைகள் மத்திய கிழக்கின் எண்ணெய் உற்பத்தி, விநியோகத்தை சீர்குலைக்க கூடும் என்ற அச்சங்களுக்கு மத்தியில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் 04. 00 GMT மணியளவில் 3.10 அமெரிக்க டொலர்கள் அல்லது 3.67% உயர்ந்து ஒரு பீப்பாய் 87.68 டொலராக பதிவானது.
யு.எஸ். வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் 3.26 அமெரிக்க டொலர்கள் அல்லது 3.94% உயர்ந்தது, ஒரு பீப்பாய் 86.05 டொலராக பதிவானது.
இஸ்ரேல் – பாலஸ்தீன் எண்ணெய் உற்பத்தியாளர்கள் அல்ல, எனினும் மத்திய கிழக்கு பிராந்தியமானது உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.