ஒரு கிலோ லீக்ஸின் மொத்த விற்பனை விலை சுமார் 40 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளதால், தாம் ஆதரவற்றுள்ளதாக லீக்ஸ் பயிரிடும் வெலிமடை விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
வெலிமடை, சில்மியாபுர, பாதினாவெல, பொரகஸ், ரேந்தபொல போன்ற பிரதேசங்களில் லீக்ஸ் அதிகம் பயிரிடப்பட்டு 40 ரூபாவுக்கு விற்பனை செய்வதால் உற்பத்திச் செலவை ஈடுகட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
குறைந்த விலைக்கு லீக்ஸை தம்மிடம் இருந்து பெற்றுக் கொண்டாலும், சந்தையில் லீக்ஸ் சில்லரை விலை 350 முதல் 400 ரூபா வரை கிடைப்பதாகவும், அதனால் இடைத்தரகர்களுக்கு அதிக இலாபம் கிடைப்பதாக விவாசயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு, லீக்ஸ் உற்பத்தி செலவைக் குறைக்க அதிகாரிகள் ஏதாவது திட்டம் தயாரிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.