Saturday, November 16, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிக்கு ஒருவரின் தலையணையின் கீழ் இருந்த 11 இலட்ச ரூபா மாயம்

பிக்கு ஒருவரின் தலையணையின் கீழ் இருந்த 11 இலட்ச ரூபா மாயம்

களுத்துறை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றின் பிக்கு ஒருவருக்கு சொந்தமான 11 இலட்சம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பிக்கு இந்த முறைப்பாட்டை செய்யப்பட்டுள்ளதாகவு, இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விஹாராதிபதி தங்கியிருந்த அறையில் கட்டில் தலையணைக்கு அடியில் இருந்த 10 இலட்சத்து தொண்ணூற்று ஏழாயிரத்து ஐநூறு ரூபா பணம் திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளது.

ஆலயத்தின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட பணமே இவ்வாறு திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை பிரிவு கைரேகை பரிசோதனை அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles