செய்திகள்உள்நாட்டுகொலை முயற்சி: இருவர் கைது

கொலை முயற்சி: இருவர் கைது

கடந்த ஒகஸ்ட் 5 ஆம் திகதி வெலிவேரிய பொலிஸ் பிரிவிற்குள் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு கொலை செய்ய முயற்சித்த இருவர் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்ததுடன, அவர்களிடம் இருந்து துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் 32 மற்றும் 42 வயதுடைய பாதுராகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக வெலிவேரிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles