Saturday, November 16, 2024
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீதியோர மரங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

வீதியோர மரங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வீதியோரங்களில் விழும் அபாயத்தில் உள்ள பெரிய மரங்கள் தொடர்பில் உடனடி ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வுகளின் பின்னர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக வீதியோரங்களில் உள்ள மரங்களை அகற்றுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் சுற்றுச்சூழல் ஆணையம், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளூராட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு இராஜாங்க அமைச்சர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles