Saturday, November 16, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு4 மாத குழந்தையை வன்புணர்ந்த தந்தை கைது

4 மாத குழந்தையை வன்புணர்ந்த தந்தை கைது

4 மாத குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறிகல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று (05) காலை மனைவி குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறு கணவரிடம் கூறி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், சிறிது தூரம் சென்றதும் குழந்தை தொடர்ந்து அழும் சத்தம் கேட்டுள்ளது.

எனவே, வீட்டிற்குத் திரும்பியபோது, ​​கணவர் தரையில் அமர்ந்து குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு பாலியல் வன்புணர்வு செய்வதைக் கண்டுள்ளார்.

பின்னர் கணவரை தாக்கி குழந்தையை தன்னுடன் அழைத்து சென்று மொனராகலை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்படி செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.

குழந்தை மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles