Friday, March 27, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாணாமல் போயிருந்த சிறுமி ரயில் மோதுண்டு பலி

காணாமல் போயிருந்த சிறுமி ரயில் மோதுண்டு பலி

மாத்தறை, வல்பலவில் நேற்று (05) இரவு ரயில் மோதுண்டு சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

16 வயதுடைய குறித்த சிறுமி காலியில் இருந்து பெலியத்த நோக்கி பயணித்த ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சிறுமி அம்பலாந்தோட்டை, நோனாகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

அவர் காணாமால் போயுள்ளதாக அவரது குடும்பத்தினரால் அம்பலாந்தோட்டை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் மாத்தறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles