2024 வரவு-செலவுத் திட்டம், சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வு காரணமாக பண வீக்கத்தில் திருப்பம் ஏற்படலாம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கை மத்திய வங்கியும் அரசாங்கமும் இணைந்து எதிர்காலத்தில் 5% பணவீக்க வீதத்தை புதிய CBSL சட்டத்தின் பிரகாரம் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நாணய சபையின் நாணயக் கொள்கை மீளாய்வு தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (05) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநனர் நந்தலால் வீரசிங்க இதனை கூறினார்.