Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உலகம்சிரியாவில் இராணுவப் பள்ளி மீது தாக்குதல்: 100 பேர் பலி

சிரியாவில் இராணுவப் பள்ளி மீது தாக்குதல்: 100 பேர் பலி

சிரியாவின் ஹோம்ஸ் நகரில் உள்ள இராணுவப் பள்ளி மீது ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இராணுவப் பாடசாலையொன்றில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதலில் வெடிபொருட்களுடன் கூடிய ஆளில்லா விமானம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாக்குதலில் காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles