Friday, March 27, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகார் விபத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம்

கார் விபத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம்

கொழும்பு – குருந்துவத்தை பிரதேசத்தில் சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் நேற்று (05) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் இன்று (06) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வலஸ்முல்ல பிரதேசத்தில் வசிக்கும் போக்குவரத்து திணைக்களத்தின் 25 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் கடமையில் ஈடுபட்டிருந்த போதுஇ குறித்த பகுதியில் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரை, ஐடி இன்ஜினியராக பணிபுரியும் ஒருவர் ஓட்டியதாக தகவல் வெளியானது.

27 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நாரஹேன்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

சந்தேகநபரின் தந்தை பல வருடங்களுக்கு முன்னர் அப்போதைய முன்னாள் பொலிஸ் மா அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க பொலிஸ் வைத்தியசாலையில் மகப்பேறு வைத்திய நிபுணராக பணிபுரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த வைத்தியருக்கு பிரதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவி வழங்கப்பட்டுள்ளதுடன்இ பல வருடங்களுக்கு முன்னர் குறித்த வைத்தியர் பொலிஸ் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles