2019 ஆம் ஆண்டு ஏப்ரல் குண்டு தாக்குதலைத் தொடர்ந்து, சஹ்ரான் ஹாசிமின் தந்தை உள்ளிட்டவர்கள் அம்பாறை – சாய்ந்தமருதில் தங்களது வீட்டில் குண்டு ஒன்றை வெடிக்கச் செய்து மரணித்தனர்.
அம்பாறை மயானத்தில் புதைக்கப்பட்டுள்ள அவர்களது சடலங்கள் (உடற்பாகங்கள்) நாளை (27) மீள தோண்டி எடுக்கப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அவர்களுடன் சாரா என்று அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரனும் மரணித்துவிட்டாரா? என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
குறித்த உடற்பாகங்களில் சாராவின் மரபணுக்கள் உள்ளனவா? என்பதை அடையாளம் காண அவை தோண்டப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் சாரா இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருப்பதாக சாட்சிகள் கூறப்பட்டுள்ளது.