Saturday, November 16, 2024
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவும் அபாயம்

சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவும் அபாயம்

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” அண்மைக் காலமாகப் பெய்துவரும் கனமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டுள்ளன.

இதனால், பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. குறிப்பாக சிறுவர்கள் மத்தியில் காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதோடு சுவாசம் சம்பந்தமான நோய்களும் ஏற்பட்டு வருகின்றன.

அத்துடன் சிறுவர்களின் உடல் பருமன் மேலும் அதிகரித்து வருகின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் சுத்தமான நீர் மற்றும் உணவினை எடுத்துக்கொள்வது அவசியம். இதன்மூலம் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்த்துக்கொள்ள முடியும் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles