சர்வதேச நாணய நிதியம் வழங்கும் கடனின் இரண்டாம் தவணை நிச்சயமாக கிடைக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (04) உரையாற்றும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகளுக்கு அமைய கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் உள்ளிட்ட பல திருத்தங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், இதற்காக நட்பு நாடுகள் உள்ளிட்ட நட்புறவு அமைப்புக்கள் தமது நாட்டுக்கு உதவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் வருவாயை அதிகரிப்பதற்காக விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கி திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.