Saturday, November 1, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகார் கதவில் மோதுண்டு ஒருவர் மரணம்

கார் கதவில் மோதுண்டு ஒருவர் மரணம்

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதி உப்புமடம் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கதவு திடீரென திறந்தமையினால், வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று அதனுடன் மோதுண்டு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

விபத்தினை ஏற்படுத்திய காரின் சாரதி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles