புதிய இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்துக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேலும் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, ரெஹான் ஜயவிக்ரம மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர். ஜி.எல். பீரிஸ் ஆகியோர் இன்று இந்த மனுவை தாக்கல் செய்து, அதன் பிரதிவாதியாக சட்டமா அதிபரை பெயரிட்டுள்ளதுடன், இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த சம்பத், முன்னாள் தலைவர்/நிறைவேற்றுக்குழு உறுப்பினர் லசந்த ருஹுனுகே மற்றும் பொருளாளர் டி.நடராசா ஆகியோரும் இலக்கம் SC SD 67/2023 இன் கீழ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.