வெளிநாட்டிலிருந்து வைத்தியர்களை வரவழைத்து இலங்கையின் அரச மருத்துவமனைகளில் பணியில் இணைப்பதற்கான எந்தவித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லையென சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மருத்துவத்துறையில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அவ்வாறனதொரு நடவடிக்கை முன்னெடுக்கப்படாது என அவர் கூறினார்.
வெளிநாட்டிலிருந்து வைத்தியர்களை வரவழைக்கும் நோக்கம் இருக்கிறதா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வியெழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.