தற்போது இளம் தம்பதிகளுக்கு குழந்தை இல்லாத நிலை காணப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த வைத்தியர்,
இளம் தம்பதியொருவர் எதிர்காலத்திற்காக இன்னொரு சந்ததியைப் பெற்றெடுக்கும் வீதம் 2.1 ஆக இருக்க வேண்டும் எனவும்,ஆனால் தற்போது அது 1.9 ஆக குறைந்துள்ளது.
இனி பிரசவங்களின் எண்ணிக்கை அதிகரிக்காவிட்டால், இலங்கையில் பாரிய தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும்.
அடுத்த நான்கைந்து வருடங்களில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தாலும், இந்த தொழிலாளர் பற்றாக்குறையால் நாடு பாதிக்கப்படும் எனவும் வைத்தியர் வலியுறுத்தியுள்ளார்.