2023 ஆம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா, ஜேர்மன் மற்றும் சுவீடன் நாடுகளை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பியரி அகோஸ்தினி, பெரங்க் க்ரவுஸ், ஆனி ஹூலியர் ஆகிய மூன்று விஞ்ஞானிகள் இந்த நோபல் பரிசினை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அணுக்கள், மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்களை ஆராய்வதற்கான சோதனைகளுக்காக இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.