இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சிக்கான சாதகமான அறிகுறிகளைக் காட்டுவதாக உலக வங்கியின் பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வோக்கர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (03) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரம் 2023ல் -3.8% வீழ்ச்சியடைந்த பின்னர், 2024 இல் 1.7% ஆல் வளர்ச்சியடையும் என எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார்.
19 மாதங்களுக்கு முன்பு 70% ஆக இருந்த பணவீக்கம் தற்போது ஒற்றை இலக்கத்தை எட்டியுள்ளதாக உலக வங்கியின் பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.