Saturday, February 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

உருக்குலைந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு

புத்தளம் – உடப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பள்ளிவாசல்பாடு பிரதேசத்தில் உள்ள கடற்கரையோரத்தில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று (03) காலை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக சென்ற பள்ளிவாசல்பாடு பிரதேச மீனவர்கள், கரையொதுங்கியிருந்த சடலத்தை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சடலத்தை அடையாளம் காண முடியாத நிலையில் உருக்குலைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles