நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (03) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சிறு வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே 318.31 ரூபாவாகவும், 329.00 ரூபாவாகவும் காணப்படுகிறது.
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி நேற்று (02) முறையே 318.27 ரூபாவாகவும், 329.01 ரூபாவாகவும் காணப்பட்டது.