அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான சிவில் மோசடி வழக்கு, நியூயோர்க் நீதிமன்றத்தில் நேற்று (02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி தனது சொத்து விற்பனை நிறுவனங்கள் தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கியதன் மூலம் சுமார் 100 மில்லியன் டொலர்களை நேர்மையற்ற முறையில் சம்பாதித்ததாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
டிரம்ப் மற்றும் அவரது நிறுவனத்திற்கு எதிரான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்க வேண்டும் என வழக்கறிஞர் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.