Thursday, April 30, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

பேக்கரி உற்பத்திகளின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு

மின்கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டால், வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான வெதுப்பக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

காலியில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அதன் தலைவர் கமல் பெரேரா இதனைத் தெரிவித்தார்.

தற்போது மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆராயப்பட்டு வருகின்றது.

இந்த மாதம் முதல் மின் கட்டணத்தை திருத்தியமைக்குமாறு இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

எரிபொருள் விலையேற்றத்தினால் தமது தொழிற்துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சூழலில், மீண்டும் மின்கட்டணம் உயர்த்தப்படுமானால் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை அதிகரிக்க வேண்டியேற்படும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான வெதுப்பக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கமல் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles