பிரித்தானிய அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.
ரஷ்ய ஹேக்கர்கள் குழுவொன்று இந்த இணைய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகவும், தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சைபர் தாக்குதலால்,இணையதளம் சுமார் ஒன்றரை மணி நேரம் செயலிழந்த நிலையில், பாதுகாப்புப் படையினரும்இ கணினி நிபுணர்களும் இணைந்து அதை மீட்டெடுத்துள்ளனர்.
இந்த சைபர் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்க பக்கிங்ஹாம் அரண்மனை மறுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.