Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவர் ஒருவர் மீது தாக்குதல்: ஐவர் கைது

மாணவர் ஒருவர் மீது தாக்குதல்: ஐவர் கைது

பின்வத்தை பிரதேசத்தில் மாணவர் ஒருவரைத் தலைக்கவசத்தால் தாக்கிய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசலை ஒன்றில் இரண்டு மாணவர்களிடையே ஏற்பட்ட முரண்பாடே இந்தத் தாக்குதலுக்கு காரணம் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பின்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

பின்வத்தை, மீகஹகோவில வீதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்டவர்களில் தகராறில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்களும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 21ஆம் திகதி பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த மாணவர் மீதே சந்தேகநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதுடன் சுமார் பத்து நாட்களாக பொலிஸாரின் தேடுதலிலிருந்து தப்பிக் கொள்ளும் நோக்கில் இவர்கள் தலைமறைவாக இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles