தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மக்கள் கவனம் செலுத்துவது முக்கியம் என அதன் பணிப்பாளர் கலாநிதி நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.
பல இடங்களில் மழைநீர் தேங்கி இருப்பதால் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகிறது எனவும், அதனால் எதிர்காலத்தில் தொற்று நோய் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக இந்நாட்களில் காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் இரத்தப் பரிசோதனை செய்வது அவசியமானது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த வருடத்தில் இதுவரை 38 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.