லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இன்று கூடவுள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளமையால், லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் பொதுமக்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகாத வகையில் லிட்ரோ எரிவாயு விலை திருத்தம் செய்ய எதிர்ப்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.