Monday, July 21, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜப்பான் செல்ல இரகசியமாக விமானத்திற்குள் ஏறி அமர்ந்த நபர்

ஜப்பான் செல்ல இரகசியமாக விமானத்திற்குள் ஏறி அமர்ந்த நபர்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் இரகசியமாக பிரவேசித்து ஜப்பானுக்கு பயணிக்க விமானத்தில் ஏறி அமர்ந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வத்தளை, ஹெந்தலையைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஜப்பானில் சில காலம் பணியாற்றிய பின்னர் திருமணம் செய்து கொள்வதற்காக இலங்கைக்கு வந்தவர் எனவும், பின்னர் ஜப்பான் செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு நேற்று (30) வீட்டை விட்டு வெளியேறியவர் எனவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரிடம் ஜப்பான் செல்வதற்கான ஆவணம் எதுவும் இருக்கவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles