இலங்கை தற்போதைய கடன் நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமாக இருந்தால், முக்கியமான சில தீர்மானங்களை எடுக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) வலியுறுத்தியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் ஏன் மேரி கல்டே இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை நாணயக் கொள்கையை கடுமையாக்க வேண்டும் எனவும், வரியை உயர்த்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், கடன் நெருக்கடியை சமாளிக்க நெகிழ்வான மாற்று விகிதங்களை பின்பற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
#ரொய்ட்டர்ஸ்