Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇறைச்சி உற்பத்தியை அதிகரிக்க ஆடு - மாடுகளை இறக்குமதி செய்ய திட்டம்

இறைச்சி உற்பத்தியை அதிகரிக்க ஆடு – மாடுகளை இறக்குமதி செய்ய திட்டம்

பால் மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகரிப்பதற்காக பொருத்தமான இரண்டு வகை மாடுகள் மற்றும் ஆடுகளை அறிமுகப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்ககுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திற்கு குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், பால் மற்றும் இறைச்சி உற்பத்திக்காக கால்நடைகளை இறக்குமதி செய்தாலும், நாட்டின் காலநிலை அவற்றுக்கு ஏற்புடையதல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் அவை ஏனைய நோய்களுக்கு உள்ளாகி உயிரிழப்பதாகவும் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles