Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமகளின் தகராறில் தலையிட்ட தந்தை கொலை

மகளின் தகராறில் தலையிட்ட தந்தை கொலை

மினுவாங்கொடை -அளுதெபொல பிரதேசத்தில் நபர் ஒருவர் பொல்லால் தாக்கப்பட்டு கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (28) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அளுதெபொல – துனகஹ பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த நபரின் மகள் தனது சட்டப்பூர்வ கணவரிடமிருந்து விலகி வேறு ஒருவருடன் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரது தந்தை தலையிட்ட போது, குறித்த நபர் தடியால் தாக்கியதன் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை மினுவாங்கொடை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை இன்று (29) நடைபெறவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles