தமது நாட்டில் காலநிலை செழுமைத் திட்டத்தை வெற்றி பெறச் செய்வதற்கு 2023 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கு 26.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் இன்று ஆரம்பமான “பேர்லின் குளோபல்” மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
தற்போதுள்ள கடன் மறுசீரமைப்பு மிகவும் சிக்கலானதாக உள்ளமையினால் இலங்கைக்கு புதிய சர்வதேச நிதி கட்டமைப்பு தேவை என்றும் ஜனாதிபதி கூறினார்.