Saturday, April 19, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF உடனான பேச்சுவார்த்தை தோல்வி

IMF உடனான பேச்சுவார்த்தை தோல்வி

சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட புதிய பொருளாதார மறுசீரமைப்புகளில் இதுவரை அமுல்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான முதலாவது முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் குறித்து IMF அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அரசாங்க வருவாய் ஈட்டலில் ஏற்படக்கூடிய பற்றாக்குறை காரணமாக 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்புப் பொதியின் முதலாவது முன்னேற்ற மீளாய்வில் அதன் ஊழியர்கள் இலங்கையுடன் பணியாளர்கள் அளவிலான உடன்படிக்கையை எட்டவில்லை.

கடினமான மிகவும் அவசியமான சீர்த்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை பாராட்டத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது.

எனினும் பொருளாதாரம் ஸ்திரத்தன்மைக்கான தற்காலிக அறிகுறிகளைக் வெளிப்படுத்துவதில் இலங்கை தோல்வியடைந்துள்ளது.

ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பதுடன் வளர்ச்சி வேகமும் தாழ்ந்த நிலையில் உள்ளது.

வருவாய் திரட்டல் முன்னேற்றங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மேம்படுத்தப்பட்டாலும், ஆண்டு இறுதியில் ஆரம்ப கணிப்புகளை விட கிட்டத்தட்ட 15 சதவீதம் அது குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வரி திரட்டல்கள் முறைமைப்படுத்தப்பட்டு, வரி சலுகைகள் நீக்கப்பட வேண்டும்.

பணியாளர்கள் மட்ட உடன்படிக்கையை விரைவில் எட்டுவது தொடர்பாக இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் தொடரும் என்றும் பீடர் புருவர் தலைமையிலான IMF தூதுக்குழு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை வந்துள்ள IMF தூதுக்குழு சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட புதிய பொருளாதார மறுசீரமைப்புகளில் இதுவரை அமுல்படுத்தப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான முதலாவது முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலை கடந்த இரு வாரமாக நடத்தியது.

இந்த கலந்துரையாடல்களின் பின்னரே மேற்கண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles