இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் இந்த ஆண்டு 8 பில்லியன் அமெரிக்க டொலர்களை நெருங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, 2023 ஆகஸ்ட் மாத இறுதியில் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 7,983.13 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, 2023 ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், இலங்கையின் சரக்கு ஏற்றுமதி 2023 ஆகஸ்ட்டில் 6.98% அதிகரித்து 1,091.6 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவானது.
எனினும் அது 2022 ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது 10.91% வீழ்ச்சியாகும்.
2022 இல் இலங்கையின் பொருட்கள் ஏற்றுமதி வருமானம் 13 பில்லியன் அமெரிக்க டொலர்களை விஞ்சியமையும் குறிப்பிடத்தக்கது.