Tuesday, May 6, 2025
24 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதீர்வு வழங்காவிடின் பேருந்து சேவையிலிருந்து விலக நேரிடும் - பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

தீர்வு வழங்காவிடின் பேருந்து சேவையிலிருந்து விலக நேரிடும் – பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

உதிரி பாகங்கள் இன்மையால் பேருந்துகளை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

டயர், பேட்டரி, பிரேக் லைனர் உள்ளிட்ட உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் ஏராளமான பேருந்துகள் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த நிலைமைக்கு தீர்வு வழங்கப்படாவிடின் பேருந்து சேவையிலிருந்து விலக நேரிடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles