Thursday, July 3, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபாடசாலையில் சட்டவிரோத மதுபானம் விற்ற மாணவன்

பாடசாலையில் சட்டவிரோத மதுபானம் விற்ற மாணவன்

பிரபல பாடசாலை ஒன்றின் மாணவன் ஒருவன் பாடசாலைக்குள் சட்டவிரோத மதுபானத்தை விற்பனை செய்து கொண்டிருந்த போது அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் பிடிபட்டதையடுத்து அவர் கலவானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவர் கடுமையாக எச்சரித்து விடுவிக்கப்பட்டதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த பள்ளியில் 9ம் ஆண்டு படிக்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு சட்டவிரோத மதுபானத்தை விற்றுள்ளார்.

குறித்த மாணவன் சட்டவிரோத மதுபானத்தை தண்ணீர் போத்தலில் கொண்டுவந்து பாடசாலையில் வைத்து கோப்பையில் ஊற்றி உயர்தர மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுவனின் தாயார் வெளிநாட்டில் உள்ளதாகவும் தந்தை குடும்பத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த சிறுவன் தமது தாயின் சகோதரியுடன் வாழ்ந்து வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் சிறுவனின் தாயின் சகோதரி அவரை பொறுப்பேற்க மறுத்தமையை அடுத்து சிறுவன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து சிறுவனின் மூத்த சகோதரர் அவரை பொறுப்பேற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles