சர்வதேச சந்தையில் இன்று (26) ஆரம்ப வர்த்தகத்தில் மசகு எண்ணெய் விலை ஓரளவு சரிவடைந்துள்ளது.
ப்ரெண்ட் மசகு எண்ணெய் 04.00 மணியளவில் (GMT) ஒரு பீப்பாய்க்கு 38 சென்ட்கள் குறைந்து 92.91 அமெரிக்க டொலர்களாக இருந்தது.
அதேநேரத்தில், யு.எஸ். வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் 34 சென்ட்கள் குறைந்து 89.34 அமெரிக்க டொலர்களாக பதிவானது.
சர்வதேச ரீதியில் முக்கிய மத்திய வங்கிகள் அதிக வட்டி விகிதங்களை வைத்திருப்பதால் எரிபொருள் தேவை குறையும் என்ற கவலைகளுக்கு மத்தியில், விநியோகம் இறுக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவும் சவுதி அரேபியாவும் இந்த ஆண்டு இறுதி வரை உற்பத்திக் குறைப்புகளை நீட்டித்துள்ளதால் விநியோகம் இறுக்கமாகமான நிலையை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.