2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர் – அதிபர் சம்பள முரண்பாடுகள் தாக்கல் செய்யப்படாவிட்டால் எதிர்வரும் சர்வதேச ஆசிரியர் தினத்தில், தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இன்று (26) நடைபெற்ற மத்திய கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் சர்வதேச ஆசிரியர் தினத்தில் தெளிவான அறிக்கை வெளியிடப்படும் என தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
2021ஆம் ஆண்டு ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கைக்கு அப்பாற்பட்ட போராட்டமாக இது அமையும் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.