தென் மாகாணத்திலும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வாழங்கும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
தகவல் தொழில்நுட்ப முறைமை புதிப்பிப்பு பணிகள் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த சேவைகள் செப்டெம்பர் 27 முதல் ஒக்டோபர் 02 ஆம் திகதி வரை இடைநிறுத்தப்படும்.
இதனிடையே, செப்டெம்பர் 24 நள்ளிரவு முதல் வாகன வருமான உரிமத்திற்கான ஆன்லைன் சேவைகளும் ஒக்டோபர் 06 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மத்திய மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் பணிகள் நாளை (27) முதல் ஒக்டோபர் 02 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.