Tuesday, March 31, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவில் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 20 ரயில் என்ஜின்கள் இலங்கைக்கு

இந்தியாவில் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 20 ரயில் என்ஜின்கள் இலங்கைக்கு

சுமார் 20 ரயில் என்ஜின்களை இலங்கைக்கு வழங்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்சார ரயில்களை இயக்குவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், செயலிழந்த சில ரயில் என்ஜின்களை இலங்கைக்கு வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு பொருத்தமான ரயில் என்ஜின்கள் உள்ளதா என்பதைக் கண்டறியும் தொழில்நுட்பக் குழுவை எதிர்காலத்தில் இந்தியாவுக்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

அப்போது அந்த இன்ஜின்களை இலங்கைக்கு கொண்டு செல்வது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles