Tuesday, July 29, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீரில் மூழ்கி போலந்து பெண் மரணம்

நீரில் மூழ்கி போலந்து பெண் மரணம்

தங்காலை – மரகொல்லிய கடற்பரப்பில் நேற்று மாலை போலந்து பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 22 வயதுடைய பெண்ணும் அவரது காதலனும் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து தங்காலை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி யுவதி உயிரிழந்துள்ளார்.

சடலம் தற்போது தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தங்காலை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles