எத்தியோப்பியாவில் இருந்து சுமார் 30 கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப் பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த வெளிநாட்டு பிரஜை ஒருவர் நேற்று (24) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்கெய்ன் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 26 வயதான கென்ய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 4 கிலோ நிறையுடைய கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
கொக்கேய்ன் போதைப்பொருளுடன் சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.