ஈஸ்டர் தாக்குதலுக்கு தானும் பொறுப்பேற்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் இன்று (22) உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த தாக்குதலின் பொறுப்பில் இருந்து எந்த அரசாங்கமும் நழுவ முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டிருந்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் 31 பேர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.