Monday, June 15, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபரிந்துரையின்றி மாணவர்களுக்கு இன்ஹேலர்களை விற்பனை செய்த நபர் கைது

பரிந்துரையின்றி மாணவர்களுக்கு இன்ஹேலர்களை விற்பனை செய்த நபர் கைது

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி பாடசாலை மாணவர்களுக்கு இன்ஹேலர் கருவிகளை வழங்கியதாக கூறப்படும் வர்த்தகர் ஒருவரை கொகரெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இப்பாகமுவ பிரதேசத்தில் உள்ள அரச பாடசாலையொன்றின் ஆசிரியை ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (21) பாடசாலை மாணவர்களின் புத்தக பைகளை குறித்த ஆசிரியர் சோதனை செய்ததில் இன்ஹேலர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இப்பாகமுவ பிரதேசத்தில் தொலைபேசி விற்பனை நிலையமொன்றை நடத்தும் ஒருவரினால் இந்த இன்ஹேலர்கள் வழங்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

ஆசிரியர் கொகரெல்ல பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles