தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டா என அழைக்கப்படும் நந்துன் சிந்தகவிடமிருந்து போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
போதைப்பொருளுக்கு அடிமையான குற்றவாளிகள் அவை கிடைக்காத போது, போதை மாத்திரைகளை பயன்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தற்போது தலைமறைவாகியுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் கான்ஸ்டபிளே ஹரக் கட்டாவுக்கு குறித்த போதை மாத்திரைகளை வழங்கியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட சோதனையில் , பொலிஸ் கான்ஸ்டபிளின் அலுமாரியிலிருந்து சுமார் ஆயிரம் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஹரக் கட்டாவுக்கு தப்பிச் செல்வதற்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் கான்ஸ்டபிளை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.