தனது 8 வயது மகளை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 12 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து ஆனமடுவ நீதவான் நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டுள்ளது.
ஆனமடுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் நவகத்தேகம – முல்லேகம பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
பெப்ரவரி 25 2020 அன்று, வயோதிப பெண் ஒருவர் தனது பேத்தி சந்தேக நபரால் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக நவகம பொலிஸில் முறைப்பாடு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் செயற்பட்ட பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து நீதவானிடம் ஆஜர்படுத்தியதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிளின் சேவையையும் புத்தளம் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இடைநிறுத்தியிருந்தார்.
நேற்று (21) சந்தேகநபருக்கு எதிரான வழக்கு ஆனமடுவ நீதவானின் மேற்பார்வையில் அழைக்கப்பட்ட போது, அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதையடுத்து, மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.