கனேடிய பிரஜைகளுக்கான விசா சேவையினை இந்திய அரசாங்கம் இடை நிறுத்தியுள்ளது.
கனேடிய மண்ணில் சீக்கிய பிரிவினைவாதி ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பில் சர்ச்சை மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
கனடாவில் கடந்த ஜூன் 18 அன்று சீக்கிய ஆலயத்துக்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக திங்களன்று (19) ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார்.
எனினும் அவரது குற்றச்சாட்டினை இந்தியா மறுத்தது.
இந்நிலையில், கனேடியர்களுக்கான விசா இடைநிறுத்தம் தொடர்பான செய்தி முதலில் BLS இணையதளத்தில் வியாழன் அன்று வெளியிடப்பட்டுள்ளது.