Sunday, November 17, 2024
25 C
Colombo
செய்திகள்உலகம்ஈரான் பெண்களுக்கு மற்றுமொரு கடுமையான சட்டம்

ஈரான் பெண்களுக்கு மற்றுமொரு கடுமையான சட்டம்

ஈரானில் ஆடை அணிவதில் விதிகளை மீறும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கடுமையான தண்டனை விதிக்கக்கூடிய சட்டமூலத்தை ஈரான் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.

இந்த சட்டமூலத்தின் விதிகளின்படி, பொது இடங்களில் ‘தகாத முறையில்’ உடை அணிவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

ஈரானின் தண்டனைச் சட்டத்தின்படி மேற்படி குற்றத்துக்கு 180 மில்லியன் முதல் 360 மில்லியன் ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்த சட்டமூலம் சட்டமாக மாறுவதற்கு முன்பு கார்டியன் கவுன்சிலின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இந்த சட்டமூலம் அரசியலமைப்பு மற்றும் ஷரியாவுக்கு முரணானது என கருதினால் அதை தடுக்கும் அதிகாரம் அவர்களுக்கு உள்ளது.

இந்த ஹிஜாப் சட்டமூலம் 152-க்கு 34 என்ற நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் பெண் சாரதி அல்லது பயணிகள் ஆடைக்கட்டுப்பாட்டை மீறினால் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles