Monday, November 18, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசேவையிலிருந்து விலகிய மாநகர சபை ஊழியருக்கு 4 வருடங்களாக சம்பளம் செலுத்தப்பட்டுள்ளது

சேவையிலிருந்து விலகிய மாநகர சபை ஊழியருக்கு 4 வருடங்களாக சம்பளம் செலுத்தப்பட்டுள்ளது

கண்டி மாநகர சபைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட தொழிலாளி ஒருவர் 3 மாதங்கள் மட்டும் பணியாற்றி விலகிய பின்னரும் அவருக்கு கடந்த 4 வருடங்களாக மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்ட சம்வம் மாநகர சபையின் கணக்காய்வு பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஏப்ரல் 02 2019 அன்று கண்டி மாநகரசபையின் தொழிலாளியாக 30,500 ரூபா மாதச் சம்பளத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்ட அவர், மாநகர சபையின் நீர் திணைக்களத்திற்கு நியமிக்கப்பட்ட பின்னர், அதே ஆண்டு ஜூலை மாதம் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் சேவையை விட்டு வெளியேறினார்.

அவர் இவ்வாறு சம்பளம் பெற்ற காலத்தில் ஒன்றரை வருட காலப்பகுதியில் போதைக்கு அடிமையானவர்களுக்கான கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது. அத்துடன் அவருக்கு 17 லட்சம் ரூபா சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.

திண்மக்கழிவுப் பிரிவினர் அவர் சேவையிலிருந்து விலகியுள்ளதாக மாநகர சபை நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles